மரணம் 
செய்திகள்

மதுபோதையில் சாலையில் தவறி விழுந்த கொத்தனார் பலி

மதுபோதையில் சாலையில் தவறி விழுந்த கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கரூர்:

கரூர் மாவட்டம் வரனை ஊராட்சிக்குட்பட்ட செருப்புலி பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 27), கொத்தனார். இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்வதற்காக கோவிந்தசாமி நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் எதிர்பாராதவிதமாக சாலையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.