காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 30). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் காரிமங்கலம் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் முள்ளனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது வேலு சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் வேலு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.