மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

காரிமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே உள்ள மோதூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை (வயது 55). விவசாயியான இவர் வயலில் எலி தொல்லை அதிகம் இருந்ததால் வயல்களை சுற்றிலும் மின்வேலி அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள கொட்டகையில் படுத்து இருந்த துரை அதிகாலை எழுந்து வயலை சுற்றி பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.