விபத்து பலி 
செய்திகள்

காரிமங்கலம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலி

காரிமங்கலம் அருகே விபத்தில் தையல் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

காரிமங்கலம் அருகே உள்ள காட்டூர் பகுதி சேர்ந்தவர் கணேசன் (வயது 40). தையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அகரம் பைபாஸ் சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த ஒரு பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.