கன்வர் யாத்திரை 
செய்திகள்

கொரோனா பரவல் எதிரொலி - கன்வர் யாத்திரையை ரத்து செய்தது உத்தர பிரதேச அரசு

உத்தரகாண்ட் அரசு கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை எச்சரிக்கை காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்துள்ளது.

மாலை மலர்

லக்னோ:

கன்வர் யாத்திரை ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசத்தில் இருந்து யாத்ரீகர்கள் ஹரித்வார் செல்வார்கள்.

உத்தர பிரதசே மாநில அரசு கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் குறிப்பிட்ட நபர்களுடன் ஜூலை 25-ல் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களை முன்னிட்டு இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.