கமல் ஹாசன் 
செய்திகள்

புதுச்சேரியில் கமல்ஹாசன் இன்று 4 இடங்களில் பிரசாரம்

புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்கிறார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.30 மணிக்கு புதுவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு பத்திரிகையாளர்களை சந்திப்பு முடிந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

அங்கிருந்து திறந்த வாகனத்தில் கருவடிக்குப்பம், சிவாஜி சிலை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

அதன்பின் அவர் விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.