தற்கொலை 
செய்திகள்

கள்ளப்பெரம்பூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

கள்ளப்பெரம்பூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சையை அடுத்த களிமேடு மேலப்பள்ளியேறியை சேர்ந்தவர் ஜோயல் (வயது54). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.