அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அழகர் கோவில் கள்ளழகர் கோவில் வேதபாராயணத்துக்காக அலங்காநல்லூர் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் நஞ்சை நிலம் கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவில் துணை ஆணையர் அனிதா, உதவி ஆணையர் விஜயன் ஆகியோர் முன்னிலையில், வருவாய்த்துறையினர் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலத்தை மீட்டனர்.
அப்போது அலங்கா நல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.