அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி. 
செய்திகள்

கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான ராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பச்சையாபிள்ளை, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் கலையரசன் வரவேற்றார்.

கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்வது மற்றும் தேர்தல் பணி குறித்து ஒன்றிய செயலாளர் ராஜசேகர் ஆலோசனை வழங்கினார். 

இதில் மண்டல பொறுப்பாளர் இன்பசேகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT