இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி. 
செய்திகள்

கலவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கலவை தாலுகா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கலவை:

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலவை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலப்பழந்தை கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் பகுதிக்கு வழங்கப்பட்ட பட்டாவை வருவாய் கணக்கில் கொண்டுவர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் சம்பத், கோபி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT