ஆரணி:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் உத்தரவின்படி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் களம்பூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
களம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வடமாதிமங்கலம் பகுதியில் குமாரி (வயது 53) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது
செய்யப்பட்டார்.
அதே பகுதியில் பிரபு (38) என்பவர் மதுபாட்டில்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல்
செய்தனர்.
எட்டிவாடி பகுதியில் முருகன் (40) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது
செய்தனர். மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழ்ப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் வினோத்குமார் (28) என்பவர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.