அபராதம் 
செய்திகள்

கடத்தூரில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம்

கடத்தூர் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடத்தூர்:

கடத்தூர் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் பேரூராட்சி பணியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைக்காரர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.