கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் ஊராட்சி அண்டகுடி கிராமத்தில் மெயின் ரோட்டில் வசிப்பவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி குருவம்மாள் (வயது 68).
இவர் தனது வீட்டில் முன் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த மளிகை பொருட்கள் எரிந்து நாசம் ஏற்பட்டது. சேதமதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தினர்.