ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ரெட்டி கிளவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று
திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் தாமலேரிமுத்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.