கலால் துறை லோகோ 
செய்திகள்

பதிவு கட்டணத்தில் அரசு வேலை பெறலாம் என கூறி வைரலாகும் பகீர் தகவல்

பதிவு கட்டணம் செலுத்தினால் அரசு வேலை பெற முடியும் என கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மாலை மலர்

கலால் துறை சார்பில் வெளியிடப்பட்டதாக கூறும் வேலைவாய்ப்பு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் அரசு சார்பில் வெளியிடப்பட்டது போன்று காட்சியளிக்கும் அறிக்கையில் ரூ. 2200 பதிவு கட்டணம் செலுத்தினால் வேலையில் சேரலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கலால் துறையில் பணியாற்ற விரும்புவோர் ரூ. 2200 பதிவு கட்டணம் செலுத்தலாம் என கூறும் தகவல் மற்றும் பணியில் சேர்வதற்கான நியமன உத்தரவு ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. 

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் மத்திய கலால் துறை இதுபோன்ற அறிக்கையை வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் நியமன உத்தரவில் லோகோ மற்றும் கையெழுத்து இடம்பெற்று இருந்ததால் நெட்டிசன்கள் இது உண்மை என நினைத்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், கலால் துறையில் காலி பணியிடம் இருப்பதாக கூறும் தகவல் மற்றும் விண்ணப்ப கட்டணம் செலுத்தி பணியில் சேரலாம் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.