கொள்ளை 
செய்திகள்

ஆண்டிபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரை சேர்ந்தவர் தனிக்கொடி(62) கூலித்தொழிலாளி. வேலைக்கு செல்லும்போது வீட்டைபூட்டி சாவியை மேற்கூரையில் வைத்துவிட்டு சென்றார். மீண்டும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் தங்கநகை மற்றும் ரூ.5ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனிக்கொடி ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குபதிவு செய்து அவரது வீடு அருகே இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT