தமிழக சட்டசபை 
செய்திகள்

வருகிற 23-ந்தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வருகிற 23-ந்தேதி தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். 5-ந் தேதி சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது. இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை வருகிற 23-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் உள்ள பல்வகை கூட்டரங்கில் பேரவை தலைவர் கூட்ட உள்ளார்.

மேலும் அன்று 2020- 2021-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.