மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் 
செய்திகள்

இந்தியர்களை இழிவுபடுத்துவது ராகுல்காந்தியின் பொழுதுபோக்கு - பா.ஜனதா கண்டனம்

இந்தியர்களை இழிவுபடுத்துவது ராகுல்காந்திக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திருவனந்தபுரத்தில் பேசுகையில், ‘‘வடஇந்தியாவில் 15 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த பிறகு கேரளாவுக்கு வந்துள்ளேன். இங்கே பிரச்சினைகளை மக்கள் மேம்போக்காக அல்லாமல், ஆழமாக அலசுவது எனக்கு புத்துணர்வு அளிக்கிறது’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் கண்டனம் எழுந்தது.

இந்தநிலையில், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘இந்தியர்களை இழிவுபடுத்துவது ராகுல்காந்திக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. நீங்கள்தான் மேம்போக்கானவர், இந்தியர்கள் அல்ல’’ என்று கூறியுள்ளார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘ராகுல்காந்தியுடையது தேசிய கட்சி. நாட்டின் சூழ்நிலையை அவர் வேறுபடுத்தி பார்க்கிறார். ஒரு தேசிய கட்சி முன்னாள் தலைவர் என்ற முறையில், அவரது பொறுப்புணர்வு குறித்து சந்தேகம் எழுகிறது’’ என்றார்.