நீரில் மூழ்கி பலி 
செய்திகள்

இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

இண்டூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே கூலிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மன்னார் என்பவரது மகன் சின்னசாமி (வயது 50). கல் உடைக்கும் தொழிலாளி. இவர் கல்லுடைக்கும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது கும்பலபாடி கிராமத்தில் சாலையோரம் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நேற்று முன்தினம் கிணற்றில் அழுகிய நிலையில் சின்னசாமியின் பிணம் மிதப்பதை கண்டு அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT