பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள ராமர் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தர்மபுரி நோக்கி சென்றார். நத்தஅள்ளி அருகே கோழிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.