கோப்புபடம் 
செய்திகள்

கேரளாவில் பருவ மழை 2 நாட்கள் தாமதமாக தொடங்க வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது மே 31 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மாலை மலர்

புதுடெல்லி:

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இந்த இரண்டு காலங்களிலும்தான் நாட்டிற்குத் தேவையான மழை பெருமளவு பெய்யும்.

நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே அதாவது மே 31 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில்,  கேரளாவில் பருவமழை துவங்க 2 நாட்கள் தாமதம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கணித்துள்ளது. ஜுன் 3 ஆம் தேதி கேரளாவில் பருவமழை துவங்கக் கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.