இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 380 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,210 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,19,23,405 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 34,763 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,76,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...அதிகரிக்கும் கொரோனா பரவல் - கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு