மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 7,722, மகாராஷ்டிராவில் 1,338, தமிழ்நாட்டில் 1,039, மேற்கு வங்கத்தில் 982 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 60 ஆயிரத்து 470 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 471 பேர் உள்பட மேலும் 549 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிதாக உயிரிழப்புகள் இல்லை.
மொத்த பலி எண்ணிக்கை 4,57,740 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,170 பேர் அடங்குவர்.
நோயின் பிடியில் இருந்து நேற்று 13,543 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 41 ஆயிரத்து 175 ஆக உயர்ந்தது.
தற்போது 1,61,555 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 60.70 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 11,76,850 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... 7-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது: பொதுமக்கள் ஆர்வம்