வருமான வரித்துறை 
செய்திகள்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

புதுடெல்லி:

2021-2022-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதி வரை காலஅவகாசம் இருந்தது. கொரோனா தொற்று மற்றும் புதிய இணையதள அறிமுகம் செய்ததற்காக இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த அவகாசம் மீண்டும் டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு தரப்பிலான கணக்குகள் தாக்கல் செய்யவும் அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை டெல்லி நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.


இதையும் படியுங்கள்... இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

SCROLL FOR NEXT