கோப்புபடம் 
செய்திகள்

கிராம உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம்: வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்டம் அன்னூர் ஒற்றர் பாளையம் கிராமத்தில் வி.ஏ.ஓ.அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் ஒற்றர் பாளையம் கிராமத்தில் வி.ஏ.ஓ.அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக உதவியாளரை காலில் விழ வைத்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் வருவாய் அலுவலர் தலைமையில் தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த குழுவினர் இன்று மாலைக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். வருவாய் அலுவலர் லீலா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் ஆகியோர் தலைமையிலான குழு ஒற்றர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். சம்பவம் நடந்த போது அலுவலகத்தில் இருந்த வி.ஏ.ஓ. கலைச்செல்வி மற்றும் அனைத்து ஊழியர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.