புதுச்சேரி:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது.
அரபி கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மாகியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
ரெயில் நிலையம், மண்டல அதிகாரி அலுவலகம், கடற்கரை நடைபாதை உட்பட அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் காணப்படுகிறது.
கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்தால் கடல் நீர் உட்புகுந்துள்ளது. தலச்சேரி-மாகி தேசிய நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாகி எம்.எல்.ஏ. ரமேஷ் பரம்பத், மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.