சுமித் அன்டில் 
செய்திகள்

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு ரூ.6 கோடி பரிசு - அரியானா அரசு அறிவிப்பு

பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துனியாவுக்கு ரூ.4 கோடி வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.

மாலை மலர்

சண்டிகர்:

டோக்கியோ பாராலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். தங்கம் வென்ற சுமித் அன்டிலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில், அரியானா மாநில அரசு சுமித் அன்டிலுக்கு ரூ. 6 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. 

அதேபோல், வட்டு எறிதலில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துனியாவுக்கு ரூ.4 கோடி வழங்கப்படும் எனவும் அரியானா அரசு அறிவித்துள்ளது. பதக்கம் வென்ற இருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் எனவும் அரியானா அரசு அறிவித்துள்ளது.