விபத்து பலி 
செய்திகள்

அரூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலி

அரூர் அருகே பஸ் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொம்மிடி:

அரூர் அருகே உள்ள நம்பிபட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). கட்டிட மேஸ்திரி. நேற்று இரவு பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருந்தார். ஏ.பள்ளிப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT