விபத்து பலி 
செய்திகள்

அரூர் அருகே விபத்தில் தொழிலாளி பலி

அரூர் அருகே தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நப்பிராம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்றார். அப்போது மத்தியம்பட்டி பகுதியில் வந்தபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT