கைது 
செய்திகள்

ஆத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- என்ஜினீயர் கைது

ஆத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி 22 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் (வயது 27). என்ஜினீயர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் 22 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த இளம்பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த ஜூலை மாதம் புகார் செய்தார். 

இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் செங்குட்டுவனை கடந்த 5 மாதமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் வெளியூருக்கு செல்ல செங்குட்டுவன் காத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று செங்குட்டுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.