மரணம் 
செய்திகள்

குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு டெய்லர் பலி

குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த உல்லி கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 55), டெய்லர். இவர், நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே வளத்தூர் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபரிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT