ஜிஎஸ்டி 
செய்திகள்

செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டியது

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூலானதை விட, இந்த ஆண்டு செப்டம்பரில் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செப்டம்பர் மாதத்தில் 1 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 5 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 20 ஆயிரத்து 578 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 26 ஆயிரத்து 757 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 60 ஆயிரத்து 911 கோடி ரூபாயும் அடங்கும்.     

இதையும் படியுங்கள்...லடாக் எல்லையில் சீனா மீண்டும் படைகளை குவிக்கிறது- இந்தியா கடும் எதிர்ப்பு