தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 16 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 18 ஆயிரத்து 580 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 541 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது.