விபத்து 
செய்திகள்

சிவகங்கை அருகே வாகன சோதனை நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் பலி

சிவகங்கை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அரசு பஸ் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

சிவகங்கை:

சட்டமன்ற தேர்தலயொட்டி பணப்பட்டு வாடாவை சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகினறனர்.

அதன்படி நேற்று இரவு சிவகங்கை அருகே தாயமங்கலம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி அசோக்குமார் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா ஆகிய 3 பேர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.