புதுச்சேரி:
புதுவையில் 3 மாதங்களுக்கான இலவச அரிசிக்கான பணத்தை வழங்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்திருந்தார். அதன்படி சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு
அவரவர் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரத்து 200 செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களில் அரசு ஊழியர், மத்திய அரசு ஊழியர், சரக்கு மற்றும்
சேவை வரி செலுத்துவோரை தவிர்த்து மற்றவர்களுக்கு வழங்க மட்டும் கவர்னர் ஒப்புதல் அளித்து இருந்தார்.
ஆனால் மத்திய அரசு ஊழியர், வரிசெலுத்துவோர் விவரம் கிடைக்காததால் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கான பணம் தலா ஆயிரம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து 8 வாரங்களுக்குள் விவரங்களை பெற்று பணத்தை செலுத்துமாறு தலைமை செயலாளருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். தாமதிக்காமல் தற்போதுள்ள விவரங்களின்படி மற்றவர்களுக்கு பணத்தை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.