கவர்னர் பன்வாரிலால் புரோகித் 
செய்திகள்

துணைவேந்தர் சூரப்பா தற்காலிகமாக பணியில் தொடர கவர்னர் அறிவுறுத்தல்

புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் நியமித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை சூரப்பா தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார்.