விமான சேவை 
செய்திகள்

சர்வதேச விமான சேவைக்கு 31-ந் தேதி வரை தடை நீட்டிப்பு

குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில், இம்மாதம் 31-ந் தேதிவரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.