தங்கம் 
செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,480-க்கு விற்பனையாகிறது.

மாலை மலர்

சென்னை:

தங்கம் விலையில் இன்று 4-வது நாளாக சற்று குறைவு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் ரூ.40 குறைந்து ரூ.35 ஆயிரத்து 480-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 435 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.73 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.30-க்கு விற்கிறது.