ஜிகே வாசன் 
செய்திகள்

10 குழந்தைகள் பலி- ஜி.கே.வாசன் இரங்கல்

மகாராஷ்டிரா ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை:

மும்பை ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிராவில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தத்துக்குரியது. இச்சம்பவத்திற்கான காரணம் எதுவாக இருப்பினும் அதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை அம்மாநில அரசு கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் இனி ஒரு போதும் நடைபெறாத வகையில் மகாராஷ்டிர அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.