தற்கொலை 
செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆர்.கே.பேட்டை இஸ்லாம் நகரை சேர்ந்தவர் ஜெய்லானி (வயது 45). இவரது மகன் அமீம் பாஷா (18), மகள் தஸ்லீம் (16). சில நாட்களுக்கு முன்னர் தஸ்லீம் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தஸ்லீமின் தாய் ஜெய்லானி ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகள் தஸ்லீம் வயிற்று வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.