கைது 
செய்திகள்

7 வயது சிறுமியிடம் சில்மிஷம்- தொழிலாளி கைது

மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்:

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55.), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு அவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்து சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தார்.

இதைப் பார்த்த பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் சுப்பிரமணியை பிடித்து தர்ம அடி கொடுத்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.