விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் அபி (வயது 21). இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அடுத்த வாரம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சமூகநல அலுவலர் வசந்தகுமாரி, மகளிர் போலீஸ் ஏட்டு ஜோதி ஆகியோர் மணமகன் மற்றும் சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெண்ணுக்கு 18 வயது முடியாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.