கோப்பு படம். 
செய்திகள்

செஞ்சி அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

செஞ்சி அருகே 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று மேலச்சேரி கிராமத்தில் திருமணம் நடைபெற முடிவு செய்யப்பட்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குழந்தைகள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சாந்தி ஆகியோர் மேலச்சேரிக்கு நேரில் சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரித்தனர். 

அப்போது அவர்கள், 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் சிறுமிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்கு உரியகுற்றமாகும். எனவே திருமணத்தை உடனடியாக நிறுத்துமாறு கூறினர். 

இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறுமி விழுப்புரம் சமூகநலத்துறை அதிகாரிகள் மூலம் குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT