கைது 
செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி அருகே 5-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி(38) மாணயியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

கூலிவேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தனது தாயிடம் மாணவி நடந்த சம்பவத்தை கூறி அழுதாள். இதை தட்டிக்கேட்ட மாணவியின் தாயாரை பழனிசாமி மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து பழனிசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.