வடவள்ளி:
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (35). கூலி தொழிலாளி. நேற்று காலை இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த நாகராஜ் சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். வீட்டிற்கு வந்த சிறுமி மிகவும் சோர்வுடன் இருந்ததை பார்த்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவங்களை அவர்களிடம் கூறினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடவள்ளி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அனைத்து இன்ஸ்பெக்டர் அனுராதா, தொழிலாளி நாகராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.