சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாலமுருகனை போலீசார் அழைத்து செல்வதை படத்தில் காணலாம். 
செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை:

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

SCROLL FOR NEXT