கைது 
செய்திகள்

கெங்கவல்லி அருகே மதுவிற்ற 3 பேர் கைது

கெங்கவல்லி அருகே மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெங்கவல்லி:

கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேற்று கடம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50), ராணி (50), காந்தி (68) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT