விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர் 
செய்திகள்

ராஜஸ்தான்: விஷ சாரயம் குடித்த 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 4 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டம் ரோப்வாய் கிராமத்தை சேர்ந்த 10 பேர் இன்று விஷ சாராயம் குடித்துள்ளனர். விஷ சாராயம் குடித்த அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசசாராயம் குடித்து உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த 6 பேரை மீட்டு பாரத்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பெறுபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT