சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.
சட்டசபை தேர்தலில் இவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.