முன்னாள் நீதிபதி கர்ணன் 
செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி- சென்னை முதன்மை நீதிமன்றம்

நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை:  

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாமீன் கோரி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT